என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாம் பிளெண்டல்"
- முதலில் ஆடிய இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 306 ரன்களில் ஆல் அவுட்டானது.
மவுண்ட் மாவ்கனி:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. டாம் பிளெண்டல் மற்றும் கான்வேயின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 300 ரன்களைக் கடந்தது. சிறப்பாக ஆடிய பிளெண்டல் சதமடித்தார். அவர் 138 ரன்னிலும், கான்வே 77 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 306 ரன்களில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 19 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்களை சேர்த்தது.
- இங்கிலாந்து எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
நாட்டிங்காம்:
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம், வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டாம் லாதம் 26 ரன்னிலும், டேவன் கான்வே 46 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் பொறுப்புடன் ஆடினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் 81 ரன்னும், பிளெண்டல் 67 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார். நிதானமாக ஆடிய பிளெண்டலும் சதமடித்து அசத்தினார். பிளெண்டல் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிகை 5 விக்கெட் இழப்புக்கு 405 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், லீச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்